முப்பது ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை மூன்றாண்டுகளில் செய்தோம்: மனோ கணேசன் பெருமிதம்

Report Print Gokulan Gokulan in அரசியல்
130Shares

முப்பது வருட காலமாக முன்னைய அரசாங்கங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் செய்ய முடியாத விடயங்களை மூன்றே வருடங்களில் இன்றைய அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி செய்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமாகிய மனோ கணேசன் தெரிவித்தார்

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்.

தலவாகலை நகர மைதானத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இது மேதினக்கூட்டம் அல்ல. மேதினக்கடல். கடந்த காலத்தில் நிறத்துக்கு நிறம் மாறி மாறி ஆட்சியமைத்த அரசாங்கங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் செய்திராத விடயங்களை நாங்கள் செய்துள்ளோம்.

கணி உரிமை தனி வீடு. அத்தோடு நுவரெலிய அம்பகமுவ பிரதேச சபைகள் அதிகரிப்பு என வரிசைப்படுத்தலாம். மலையக அபிவிருத்தி அதிகார சபையும் உறுவாக்கியுள்ளோம்.

நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக மலையக தமிழச்சியை உறுவாக்கியுள்ளோம். இனி வரும் காலங்களில் யார் ஆட்சியமைத்தாலும் அது மலையக மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என்றார்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன், ரஞ்சித்மத்தும பண்டார, நாடாளுமன்றஉறுப்பினர்களாகிய எம் திலகராஜ், அ.அரவிந்தகுமார், வேலுகுமார்மத்திய மாகாணசபை உறுப்பினர்களாகிய சோ. ஸ்ரீதரன், ஆர் ராஜாராம், எம். ராம், சிங்பொண்ணையா, சரஸ்வதி, உதயகுமார் தொழிலாளர் தேசியசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், மலையக மக்கள் முன்னனியின்பொதுச்செயலாளர் அ.லோரண்ஸ், முற்போக்கு கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.