பதவி மோகத்தில் மைத்திரி! ரில்வின் சில்வா சாடல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
62Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவருக்கு பதவி மோகம் உள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) மக்கள் விடுதலை முன்னணி மே தினக் கூட்டத்தினை நடத்தியிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 இலும் ஓய்வு பெறுவதில்லை எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் மேதினக் கூட்டத்தில் கருத்துரைத்த ரில்வின் சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவருக்கு பதவி மோகம் உள்ளது.

இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா. இது போன்ற பணிகள் என்றால் இதன்பிறகும் வேண்டாம்.

இந்த ஜனாதிபதி கதிரையில் யார் அமர்ந்தாலும் அதனை போட்டுவிட்டுச் செல்ல மாட்டார். இது ஜனநாயகத்துக்கு பாரிய அடியாகும். நாம் ஆரம்பித்த போராட்டத்தை இலகுவில் கைவிட மாட்டோம் என்றார்.