ஊழல், மோசடிகளுக்கான விசேட நீதிமன்ற சட்டமூலம் விரைவில் தாக்கல்

Report Print Aasim in அரசியல்
25Shares

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்வதற்கான விசேட நீதிமன்றங்கள் அமைப்பதற்கான சட்டமூலம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொழிற்பயிற்சி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண இத்தகவலை தெரிவித்துள்ளார்.

குறித்த நீதிமன்றம் உருவாக்குவதற்கான சட்டமூலம் தொடர்பில் கரு பரணவித்தாரண மற்றும் அவரது கட்சித் தலைவரான அமைச்சர் சம்பிக ரணவக ஆகியோர் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலுடன் குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் பரணவித்தாரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஊழல் மற்றும் மோசடிகளில் தொடர்புடையவர்களை குறித்த நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.