ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்துக்கு வாக்கெடுப்பு கோரிக்கை

Report Print Aasim in அரசியல்

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரில் ​ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் நாளை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் ரஞ்சித் சொய்சா இக்கோரிக்கையை விடுத்துள்ளதுடன், கூட்டு எதிர்க்கட்சி வாக்கெடுப்புக்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திரக்கட்சியின் 16 பேரையும் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் விமர்சையாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் அவர்களுடன் இணைந்து மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.