ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மகிந்த

Report Print Murali Murali in அரசியல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். மொனராகல பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் கூறிவரும் நிலையில், மகிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.