மகிந்தவே இலங்கையில் மிகப்பெரிய திருடர்: சந்திரிக்கா சாடல்

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச இலங்கையில் மிகப் பெரிய திருடர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்திரிக்காவின் முன்னாள் செயலாளர் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர். அவரே இலங்கையில் மிகப் பெரிய திருடர்.

அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல்கள் தொடர்பில் தன்னால் எதனையும் செய்ய முடியாது.

திருடுமாறு தான் அதிகாரிகளுக்கு ஒருபோதும் ஆலோசனை வழங்குவதில்லை என சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.