திருமலை மாவட்டப் புறக்கணிப்பும் மட்டக்களப்பு மாவட்ட அலங்கரிப்பும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டம் அலங்கரிப்பு

கிழக்கு மகாணத்தில் தமிழர்கள் அதிகம் பெரும்பான்மை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. கல்முனைப் பக்கமாக நீலாவணையில் இருந்து பொலன்நறுவைப் பக்கமாக ரதிதென்னை மறு பக்கமாக திருமலை வெருகல் வரைக்குமான மிக நீண்ட ஊர்களில் வாழைச்சேனை ஓட்டமாவடி (இரண்டும் பக்கத்து சிறிய பிரதேசங்கள்) ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய 3 பிரதேசங்களில் மட்டும்தான் முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம் பிரதேசங்களாகும். மிகப் பெரிய மாவட்டம்.

ஆனால் இந்த 3 முஸ்லிம் ஊர்களுக்கும் 3 முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதானது மிகப் பெரிய விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.ஆனால் 3 அரசியல்வாதிகளும் 3 கட்சிகளைக் கொண்டவர்கள்.(ஓட்டமாவடி) பிரதி அமைச்சர் அமீர் அலி அமைச்சர் றிசாத்தின் கட்சியைக் கொண்டவர். (காத்தான்குடி) பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கில் சுதந்திரக் கட்சி சார்பான மிக முக்கிய பிரமுகர்.

அவர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட போதும் கட்சியால் எம்.பி வழங்கப்பட்டு தற்போது மிகப் பொறுப்பான நெடுஞ்சாலைகள் இராஜாங்க பிரதி அமைச்சர். மற்றவர் ஹக்கீம் கட்சியின் ஏறாவூர் அலிசாஹிர் மௌலானா.நல்லிணக்க பிரதி அமைச்சர்.ஆக 3 முஸ்லிம் ஊர்களையும் பிரதி அமைச்சர்கள் வழங்கி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டம் புறக்கணிப்பு

ஆனால் திருகோணமலை மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.திருமலை மாவட்டம் கிண்ணியாவில் மட்டும் 3 எம்பிக்கள் 3 கட்சிகள் தாங்கியுள்ளார்கள். மற்றவர் புஞ்சிநிலமே எம்பி மஹிந்த கட்சிக்கு மாறி விட்டார். ஹக்கீம் கட்சி சார்பாக ஒருவர் அமைச்சர் றிசாத் சார்பாக ஒருவர் மற்றவர் ஐ.தே.க. சார்பாக உள்ளார்கள்.

இரண்டு எதிர்பார்ப்புக்கள் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஹக்கீம் கட்சி சார்பாக தௌபீக் எம்பிக்கு பிரதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் மற்றது அப்துல்லா மஹ்றுப் எம்பிக்கு அமைச்சர் றிசாத் சார்பாக பிரதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. இம்ரான் எம்பி மிகவும் இளையவர் என்பதால் அவருக்கு பிரதி அமைச்சு கிடைக்காது என்பது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றே.

பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அமைச்சர் ஹக்கீம் கட்சிக்கு 2 பிரதி அமைச்சர் பதவிகளும் அமைச்சர் றிசாத் கட்சிக்கு ஒரு பிரதி அமைச்சும் பங்கீடு செய்யப்பட்டதாக ஏற்கனவே கசிந்தது.

அப்படியானால் ஹக்கீம் கட்சியின் ஒரு பிரதி அமைச்சர் பதவி அலி சாஹிர் எம்பிக்குப் போக மற்ற பிரதி அமைச்சர் பதவி எங்கே? அமைச்சர் றிசாத்தின் பங்கு எங்கே? ஹக்கீம் தனக்கு ஒரு பிரதி அமைச்சர் பதவி போதுமானது என்று தட்டிக்கழித்திருக்க வேண்டும்.

சந்திரிகா, மஹிந்த, மைத்திரி காலம் தொட்டு ஹக்கீம் கட்சிக்கு தாமாக வருகின்ற கபினட் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுக்களை தட்டிக் கழித்த கதை நிறைய உண்டு.அந்த வகையில் தற்போது ஒருபிரதி அமைச்சர் பதவியையாவது பெற்றுக் கொண்டாரே என்பதில் ஹக்கீம் கட்சிக்காரர்கள் பெருமை கொள்ளலாம்.

ஆனால் ஹக்கீமுக்கு சவாலாக வளர்ந்து வரும் அமைச்சர் றிசாத் அடுத்த பொதுத் தேர்தலில் ஹக்கீம் கட்சியை விட அதிக எம்பிக்களைப் பெறலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில் தனது கட்சிக்காக ஒதுக்கப்பட்ட பிரதி அமைச்சரைப் பெறுவதில் அக்கறை காட்டாது அதைத் தட்டிக் கழிப்பதில் உள்ள மர்மம் என்ன?

கிண்ணியா அப்துல்லா மஹ்றுப் எம்பிக்கு பிரதி அமைச்சர் வழங்குவதில் திருகோணமலையின் மிக முக்கிய மாற்று அணியின் அரசியல் பிரமுகர் ஒருவர் தடையாக இருந்து வருகின்றார்.மற்றது அமைச்சர் றிசாத்தின் கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மற்றது ஹக்கீமும் தடையாக இருக்கின்றார்.இப்படியாக நாலா பக்கமும் மஹ்றுப் எம்பிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இந்த நிலையில் அமைச்சர் றிசாத் மஹ்றுப் எம்பிக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கும் விடயத்தில் பின்வாங்கியிருக்கலாம்.

மஹ்றுப் எம்பிக்கு இல்லா விட்டாலும் தனது கட்சியிலுள்ள மற்ற யாருக்காவது அதைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம். திருகோணமலை மாவட்டம் புறக்கணிப்பு செய்யப்பட்டதற்கான முழுப் பொறுப்பும் ஹக்கீம் றிசாத் ஆகிய இருவரையும்தான் சாரும்.

இன்னும் ஒன்றும் கெட்டு விடவில்லை. பிரதமர் ரணிலிடம் தௌபிக் எம்பிக்காக ஹக்கீம் மஹ்றுப் எம்பிக்காக றிசாத் ஆகியோர்கள் பிரதி அமைச்சர் கோரிக்கையை முன்வைத்து நகர்வை நகர்த்தினால் நிச்சயமாக திருகோணமலை மாவட்டம் புறிக்கணிப்பில் இருந்து விடுதலை பெறும்.

அப்துல்லா மஹ்றுப் எம்பிக்கான தடைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்ப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பிரதமர் ரணிலிடம் அப்துல்லா மஹ்றுப் எம்பிக்காக பிரதி அமைச்சர் பதவி கேட்டு நிற்பாரா என்ற சந்தேகம் பலமாகவுள்ளது.

அலி சாஹிர் எம்பிக்கு அமைச்சு கொடுத்துள்ள பின்னணி என்ன?

ஹக்கீம் தனது கட்சிக்குள் எப்போதும் தனக்கு சவாலாக வரக்கூடியவர்களை சமயம் பார்த்து அறுத்து விடுவது வாடிக்கை.அந்த வகையில்தான் வசீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர்கள் அறுத்து எறியப்பட்டார்கள். இப்போது முன்னாள் கிழக்கு முதல்வர் ஏறாவூர் நஸீர் அஹமட் ஹக்கீமால் குறி வைக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை நஸீருக்கு வழங்கப்பட்ட எம்பியை குறி வைத்து ஏறாவூர் நஸீர் அஹமட் பிரதமர் ரணிலிடம் ஒரு நகர்வைச் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அப்படியான நகர்வை ஒரு போதும் ஹக்கீம் விரும்பவில்லை. அதனால் அவசரமாக அட்டாளைச்சேனை நஸீருக்கு எம்பி கொடுக்க வேண்டிய நிலை உருவானது.

மத்திய அரசுக்குள் ஏறாவூர் நஸீர் அஹமட் உள்வாங்கப்பட்டால் தனக்கும் தனது தலைமைப் பதவிக்கும் ஆபத்தாக அமைந்து விடும் என்பது ஹக்கீமுக்கு நன்கு தெரியும்.அதனால் ஏறாவூர் நஸீர் மத்திய அரசுக்குள் வருவதை ஹக்கீம் ஒரு போதும் விரும்பவில்லை. அதனால் ஏறாவூர் நஸீருக்கு ஏறாவூருக்குள் ஒரு எதிர் அரசியல்வாதியை ஹக்கீம் உருவாக்கினார். இந்த நோக்கில்தான் கடந்த பொதுத் தேர்தலில் ஏறாவூர் அலிசாஹிர் மௌலானா ஹக்கீமால் ஹக்கீம் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார்.

அலிசாஹிர் மௌலானாவின் தாய் வீடு ஐ.தே.க. புலிகள் பிளவில் கேர்ணல் கருணாவை காப்பாற்றி தனது வாகனத்தில் கொழும்பு அழைத்துச் சென்றார். அதனால் கொஞ்சக்காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அலிசாஹிரை மீண்டும் எம்பியாக்கிப் பார்க்க வேண்டும் என்ற அவா பிரதமர் ரணில் மற்றும் கருணா ஆகியோருக்கு நிறைந்து காணப்பட்டது.

இப்போது அலிசாஹிர் மௌலானாவை ஏறாவூருக்குள் பலப்படுத்த வேண்டிய தேவை ஹக்கீமுக்கு உள்ளது. அலிசாஹிரைப் பலப்படுத்தி ஏறாவூர் நஸீரை வீழ்ச்சியடையச் செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் ஹக்கீமின் கணிதம்.

அடுத்த பொதுத் தேர்தல் கொண்ட சுமார் 2 வருட காலத்திற்குள் அலிசாஹிர் தனது ஆதரவுப் பலத்தை அதிகரித்து நஸீரை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதுதான் ஹக்கீமின் பெரும் எதிர்பார்ப்பு விசேடமாக இவ்வருட இறுதி மட்டில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தலின் போது ஏறாவூர் நஸீர் தோல்வியடைய வேண்டும் என்துதான் ஹக்கீம் கணக்கு.இதற்காக அலிசாஹிர் தனது முழுப் பலத்தையும் காட்ட வேண்டும் அதற்காக ஹக்கீம் மறைமுகமாக வேண்டிய பணிகளைச் செய்து கொடுப்பார்.

இந்த நோக்கில்தான் அலிசாஹிர் பிரதி அமைச்சராக்கப்பட்டார். இதெல்லாம் புரியாமல் பாவம் பச்சைப் பிள்ளையாட்டம் அவசரமாக மாகாணத் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்.அரசியலில் கத்துக் குட்டிகள் பாவம்.