அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் போலியான தகவல்கள்! சபாநாயகர் குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சில சக்திகள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் செங் சீயுஆன் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்தார்.

இதன்போதே சபாநாயகர் இவ்வாறு கூறியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மாத்திரம் அல்ல. ஏனைய நாடுகளிலும் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வெளியக சக்திகள் மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சபாநாயகர் கரு ஜெயசூரிய, இலங்கைக்கு சீனா வழங்கும் உதவிகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய வரவேற்பு வெளியிட்டார்

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒருபோதும் இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்தப்படமாட்டாது என்று சீன தூதுவர், சபாநாயகரிடம் உறுதியளித்துள்ளார்.