அர்ஜுன் அலோசியஸ், கசுன் பளிசேன விளக்கமறியல் நீடிப்பு

Report Print Aasim in அரசியல்

பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது,

மத்திய வங்கியின் பிணைமுறி கொள்வனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பளிசேன ஆகியோர் கடந்த பெப்ரவரி 04ம் திகதி பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும் அர்ஜுன் மற்றும் பளிசேன ஆகியோரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்ட நீதிபதி லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 24ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.