முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ். பல்கலை மாணவர்களின் பின்னணியில் பணம்!

Report Print Rakesh in அரசியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால் தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது தலைமையில் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையே பொறுப்பெடுத்து நடத்தி வருகின்றது.

அன்றைய காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குகொள்ளவில்லை. ஆனால், இப்போது வந்து நாங்கள் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம், எம்முடன் இணைய விரும்புபவர்கள் இணையலாம் என்று அறிக்கை விடுகின்றனர்.

இவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது. இதனால்தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்போல் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் பங்களிப்புச் செய்வது என்றால் ஆரம்பத்திலேயே எம்முடன் கதைத்து ஆலோசனையைப் பெற்றிருக்கலாம்.

அதனை விடுத்து ஊடகங்கள் வாயிலாக நாம் நடத்தவுள்ளோம். இணைய விரும்புபவர்கள் வரலாம் என்று கூறுவது சரியானதல்ல.

எது எவ்வாறாயினும் பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரி அல்ல. எனவே, எம்முடன் சேர்ந்து எப்படிப் பயணிக்க முடியும் என்பதையே அவர்கள் சிந்திக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட நான் அவர்களுக்கு மீண்டும் அழைப்பை விடுக்கின்றேன் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

you may like this video ..