மாகாண சபைத் தேர்தல்களை சீக்கிரம் நடத்தவும்! தினேஷ் கோரிக்கை

Report Print Aasim in அரசியல்

மாகாண சபைத் தேர்தல்களை சீக்கிரமாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் இன்று உரையாற்றும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு மூன்று மாகாணங்களின் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளது. வருட கடைசியில் மேலும் மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை சீக்கிரமாக நடத்த வேண்டும் என்ற விசேட வேண்டுகோளை இச்சபையில் முன்வைத்துக் கொள்கின்றேன் என்றும் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.