சமூகங்களிடையே ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்! சிறியானி விஜயவிக்கிரம

Report Print Nesan Nesan in அரசியல்

சமூகங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு சிறந்ததொன்றாகும் என பிரதி விளையாட்டுத்துறை மற்றும் மாகாண உள்ளுராட்சி பிரதி அமைச்சருமான சிறியானி விஜயவிக்கிரம தெரிவித்தார்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம்; இல்ல விளையாட்டுப்போட்டியானது நேற்று சனிக்கிழமை(12) கல்லூரி முதல்வர் செபமாலை சந்தியாகு தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு தொடரந்து உரையாற்றுகையில்,

நான் எனது விளையாட்டுத்துறை அமைச்சை பொறுப்பெடுத்து முதன்முதலாக கலந்துகொண்டிருக்கும் நிகழ்வானது இந்த கல்லூரியில் நடைபெறும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வாகும். இதனை மிகவும் சந்தோசமாக நினைக்கின்றேன்.

சிறுவர்கள் என்பவர்கள் மிகவும் பூப்போன்றவர்கள். இவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தல் வேண்டும். இவர்களிடம் குரோத மனப்பாங்கு கிடையாது.

சரியான முறையில் வழிப்படுத்தினால் சிறந்த சமுதாயம் எதிர்காலத்தில் உருவாகும்.

மக்களுடைய எண்ணங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. எமது நாட்டைப்பொறுத்தவரையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான ஒரே ஒரு மார்க்கம் விளையாட்டேயாகும்.

இதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த மாவட்டத்தினை பொறுத்தவரையில் விளையாட்டுத்துறைக்கு என்னால் எதுவரை செய்ய முடியுமே அவற்றையெல்லாம் செய்து தருவேன்.

அத்தோடு இந்தப்பிரதேசத்தில் இருக்கும் விளையாட்டுத்துறைசார்ந்தவர்களை எந்தளவிற்கு மேல் நிலைக்கு கொண்டுபோகவேண்டுமோ அந்த அளவிற்கு கொண்டு போவதற்கு சகல வசதிகளையும் செய்துதருவேன் எனவும் கூறினார்.