புலிகளை ஊக்குவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

போர் வெற்றியை அனுஷ்டிக்கும் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எந்த தரப்பாவது நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

1988- 89 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் உக்கிரமடைந்த யுத்தம் காரணமாக பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

போர் வெற்றி அனுஷ்டிக்கும் வகையில் கொண்டாடங்களை மேற்கொள்ளாது, அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை திட்டமிட்ட வகையில் பயன்படுத்தும் சில குழுக்கள் மீண்டும் தமிழ் சமூகத்திற்குள் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டாலோ அல்லது அந்த அமைப்பின் கொள்கைகளை பிரச்சாரப்படுத்த முயற்சித்தாலோ, அரசாங்கம் அதில் கட்டாயம் தலையிட வேண்டும்.

இந்த தலையீடு வெறும் வார்த்தையாக மட்டும் இருக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.