புதிய அரசியலமைப்புச் சட்டமா அல்லது திருத்தமா?

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதா அல்லது தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதா என்பது குறித்து ஆழமாக கலந்துரையாடும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கைக் குழு கூடவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 24 ஆம் திகதி அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கைக் குழு கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான இந்த குழு அரசியலமைப்புச் சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி அறிக்கையை சமர்பித்தது.

இதேவேளை, 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நடவடிக்கை நாடாளுமன்றத்திற்கு இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்ததுடன், நாடாளுமன்றத்தில் 5 நாட்கள் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.