மடு தேவாலய பகுதியில் 300 வீடுகளை அமைக்க இந்தியாவுடன் உடன்படிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலயத்துக்கு வருகின்ற யாத்திரிகர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக 300 வீடுகளை அப்பகுதியில் நிர்மாணிப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியினை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.