முள்ளிவாய்க்கால் நினைவு கரைச்சி பிரதேச சபை அமர்வில் அனுஸ்டிப்பு

Report Print Arivakam in அரசியல்

கரைச்சி பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேலும், முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கான மூன்று நிமிட அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், சபை அமர்வை பார்வையிட வந்த பொது மக்கள் என பலரும் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.