கீத் நொயார் கடத்தல் குறித்து நாளை சபாநாயகரிடம் விசாரணை

Report Print Kamel Kamel in அரசியல்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலோ அல்லது நாடாளுமன்ற வளாகத்திலோ நாளை இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இந்த கடத்தல் குறித்து அப்போதைய அமைச்சர் கரு ஜயசூரிய, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிவித்திருந்தார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்து கரு ஜயசூவரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

எவ்வாறு கரு ஜயசூரிய நொயாரின் உயிரைக் காப்பாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தமது தலையீட்டினால் நொயாரின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும், தாமே கடத்தல் குறித்த தகவலை அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.