மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பகல் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சபையின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் மௌன இறைவணக்க அஞ்சலி செலுத்துமாறு தவிசாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடர்ந்து வழமைபோல் நடைபெற்றதுடன், இந்த மாதம் மேற்கொள்ளபட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான நிதி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.