கொழும்பு அரசியலில் திடீர்திருப்பம்: தேசிய அரசாங்கத்தில் இருந்து சுதந்திரகட்சி அமைச்சர்கள் வெளியேற்றம்?

Report Print Murali Murali in அரசியல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கட்சியின் மத்திய செயற்குழு யோசனை முன்வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது.

இதன் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.