போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் பீபிக் ராவட் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் கூறியுள்ளார்.

இலங்கை ஒரு தீவு என்ற வகையில் போதைப்பொருள் கடத்தல் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை வலுப்படுத்துவது, தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார். இதற்கு இலங்கையின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த சந்திப்பில் ஜனாதிபதி, இந்திய இராணுவ தலைமை அதிகாரிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.