நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதில் ஜே.வி.பி. தீவிரம்

Report Print Kamel Kamel in அரசியல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது தொடர்பில் ஜே.வி.பி கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது குறித்த பிரேரணை, நாடாளுமன்றில் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச பிரேரணை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி அது தொடர்பில் விரைவில் விவாதம் நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள கடும்போக்குடைய கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படுவதனை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.