ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கும் பிரபலம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றும் தீவிர முனைப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஈடுபட்டுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில காலங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி. திஸாநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் எஸ்.பி கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியை எஸ்.பி வகித்து வருகின்றார்.

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அண்மையில் அரசாங்கத்தை விட்டு விலகிய எஸ்.பி. உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை எப்படியாவது அடைய வேண்டுமென எஸ்.பி. வியூகம் வகுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.