வாக்குறுதியை மீறும் மைத்திரி: ஷான் விஜயலால் டி சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, அப்போது எந்த கட்சியையும் சாராதவராக இருந்ததால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறினார்.

தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருக்கலாம் ஆனால் தற்போது அவர் பிரதான கட்சி ஒன்றின் தலைவர் என்பதால், அவர் கொள்கை ரீதியான முடிவுக்கு வந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.