வடக்கில் உள்ள அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சித்துள்ள மகிந்த

Report Print Murali Murali in அரசியல்

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர்.

நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள். போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர்.

பலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்களாக ஆகி விட்டனர்.

நாட்டின் அனைத்து மக்களும் முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட்டார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.” என்று அவர் கூறியுள்ளார்.