பயங்கரவாத அமைப்புக்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் ஆதரவளிக்காது

Report Print Kamel Kamel in அரசியல்

பயங்கரவாத அமைப்புக்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் ஆதரவளிக்காது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பிபில பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத அமைப்புக்களுக்கு தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் உதவிகளையோ, அனுசரணையோ வழங்கவில்லை.

எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நோக்கில் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.