அமைச்சர்களுக்கு வந்த சோதனை! சம்பளத்தில் பெரும்பகுதி வரியாக அறவீடு!

Report Print Aasim in அரசியல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உழைக்கும் போது வரி செலுத்தும் முறை காரணமாக அமைச்சர்கள் பலருக்கும் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உழைக்கும் போது வரி செலுத்தும் முறையின் கீழ் அமைச்சர்களின் மாதாந்த சம்பளம், கொடுப்பனவுகள், வாகனத்திற்கான எரிபொருள் கொடுப்பனவு மற்றும் சாரதிக்கான சம்பளக் கொடுப்பனவு என்பன அவர்களின் வருமான கணிக்கப்பட்டு அதிலிருந்து புதிய வரி அறவிடப்படுகின்றது.

அந்த வகையில் இம்மாதம் பெரும்பாலான அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தில் 50 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை வரியாக அறவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு மூத்த அமைச்சருக்கு இந்த மாதம் 25 ஆயிரம் ரூபா மட்டுமே சம்பளமாக கையில் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது குறித்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலை தோன்றியுள்ளது. எனினும் நிதியமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் வரி அறவிடுதலை நேரடியாக எதிர்ப்பதற்கும் யாரும் முன்வரவில்லை என்றும் தெரியவருகின்றது.

எனவே இது குறித்து நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க சந்திப்போன்றை மேற்கொண்டு இந்த வரி அறவிடல் முறையில் நெகிழ்வொன்றை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.