முதன்முறையாக திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட தென் கொரிய தூதுவர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஹியொன் லீ (Heon Lee) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு முதல் தடவையாக நேற்று சென்றுள்ளார்.

இதன்போது, தென் கொரியாவின் இலங்கைக்கான தூதுவரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றுள்ளதுடன், கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களங்களின் உயரதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தூதுவர், ஆளுநர் அலுவலகத்தில் திணைக்கள செயலாளர்களுடனும், அலுவலக அதிகாரிகளுடனும் நட்புறவுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது கருத்து தெரிவித்த தூதுவர் ஹியொன் லீ,

திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தந்தமையையிட்டு தான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருக்கின்ற போது தான் தெற்கு கொரியா தூதுவர் ஆலயத்தில் இரண்டாவது செயலாளராக கடமையாற்றினேன்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் பாரிய யுத்த சூழ் நிலை காணரமான விஜயம் மேற்கொள்ள முடியவில்லை.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களை பார்வையிடவுள்ளதாகவும், கொரியாவினுடைய பங்களிப்பினை வழங்குவதற்கு உரிய சாதகமாக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாகவும் தூதூவர் குறிப்பிட்டுள்ளார்.