இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதமா? தெரியாது என்கிறது சீனா

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற வழமையான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங் (Hua Chunying) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரியால் வெளியிடப்பட்ட தகவல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங், குறித்த விடயம் தொடர்பில் தமக்கு தெரியாது என்றும், அதனை வர்த்தக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.