நாட்டின் எதிர்கால நன்மை கருதியே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது

Report Print Evlina in அரசியல்

சுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எமது சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள், நாட்டின் எதிர்கால நன்மை கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நிர்மாணத் துறைக்கு தேவையான கல், மண், மணல் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதனால் சூழல் கட்டமைப்புக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாட்டிற்கு முக்கியமாகும் என்பதனால் அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளை இனங்காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுடுத்த வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நிகழ்வில் கடத்தல் மற்றும் ஊழல்மிக்க வர்த்தக செயற்பாடுகளினால் சூழல் கட்டமைப்பு பாதிக்கப்படுவது மாத்திரமன்றி கடந்த சில வருடங்களாக உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டே “முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவினை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இவ்வருட சுற்றாடல் தினம் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Latest Offers