சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளில் பிரதமரின் தலையீடு இல்லை

Report Print Aasim in அரசியல்

சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீடு இல்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுமையான தலையீடு மேற்கொள்வதாகவும், அதன் காரணமாக விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அதிருப்தியில் இருப்பதாகவும் அண்மைக்காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே அவ்வாறான தகவல்களை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வன்மையாக மறுத்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்டுள்ள குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இவ்வாறான பிரச்சாரங்கள் ஊடாக எனக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை தோற்றுவிப்பது சிலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்துடன் இதனைக் கொண்டு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிலர் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கின்றது என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Latest Offers