ரஜீவ் கொலையை முன்பே அறிந்த இந்திய ரோ! தடுக்க தவறியது ஏன்?

Report Print Dias Dias in அரசியல்

ரஜீவ் காந்தி சுட்டுக் கொல்லப்படுவதாக பத்து மாதங்களுக்கு முன்பே தெரியவந்துள்ளதாக பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் நகரில் அண்மையில் பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரனின் (சுகு) மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக நிகழ்வு பத்மபிரபா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் கருத்து தெரிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ரஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் பத்து மாதங்களுக்கு முன்பு சி.ஐ.ஏ ஆவணங்கள் சில இந்திய ஊடகமொன்றில் வெளியாகின.

அந்த ஆவணத்தில் அந்த ஆண்டின் இறுதிப்பகுயில் ரஜுவ் காந்தி இலங்கையை சேர்ந்த அல்லது வேறொரு பிரதேசத்தை சேர்ந்த தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. இவ்வாறான விடயங்கள் உலகளாவிய அஜந்தாவுடன் தான் நடைபெறுகின்றன. ரஜீவ் காந்தி போக வேண்டும் என்ற தேவை நிறையபேருக்கு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers