ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைக்கப்பட்ட பகுதிகள் சபாநாயகரிடம்

Report Print Shalini in அரசியல்

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் C350 - C360 வரையான பகுதிகள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படாமல் இருந்த C350 முதல் C360 வரையான பகுதியே இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இதனை ஒப்படைத்துள்ளனர்.

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்தே இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers