பிரதமராக மகிந்த ராஜபக்ச! இலங்கை ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாயவின் பாதையில் தாம் செல்ல விரும்பவில்லை என கூட்டெதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் வியத் மக திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்கவில்லை, அது தமது பாதையும் அல்ல எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடந்த வியத் மக கருத்தரங்கின் போது, சில பேச்சாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுடன் இணங்க முடியாது. கூட்டு எதிரணியில் உள்ள சிலர் அவருடன் இணங்கிப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும், இலங்கை ஜனாதிபதி இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers