ஒசாகா விமான நிலையத்தில் நாமலுக்கு கொடுக்கப்பட்ட இன்ப அதிர்ச்சி

Report Print Shalini in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஜப்பான் - ஒசாகா விமான நிலையத்தை சென்றடைந்த நாமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலுள்ள இலங்கையர்களாலும், ஜப்பான் நாட்டவர்களாலும் நாமலுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசியக் கொடியுடன் வரவேற்பு வழங்கப்பட்டதுடன், நாமலை காண ஏராளமானோர் ஒசாகா விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

இந்த பயணம் குறித்து நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

நாமலின் இந்த பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி சானக, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.