அறிவை வளர்த்துக்கொள்ளும் பிள்ளைகள் ஆசிரியர்களுக்கு பெரும் சவால்

Report Print Steephen Steephen in அரசியல்

வகுப்பறைக்கு வெளியில் புதிய தொழிற்நுட்பம் ஊடாக அறிவை வளர்த்துக்கொள்ளும் பிள்ளை தற்போது ஆசிரியர்களுக்கு பெரும் சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் இன்று நடைபெற்ற மேல் மாகாண பாடசாலைகளுக்கான 500 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும், புதிய தொழில்நுட்ப அறிவை தேடும் மாணவனின் சவாலை எதிர்கொள்ள ஆசிரியர்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

மாணவனின் அறிவுக்கு ஏற்ப கற்பித்தலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.