பிரதமரை நீக்க நம்பிக்கையில்லா பிரேரணை தேவையில்லை: ஜனாதிபதியால் அது முடியும்

Report Print Shalini in அரசியல்

ஜனாதிபதி நினைத்தால் நாளையே பிரதமரை நீக்கிவிட்டு புதிய ஆட்சியமைக்க முடியும் என காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 30 வருட காலமாக எனது அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருந்ததாகவும், கடந்த மூன்று வருடமாக எனது அரசியல் பயணம் சரிவை சந்தித்திருப்பதாகவும் ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த 30 வருட காலத்தில் இறுதி 10 வருடங்கள் அவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்தார் என்பதையும், இவர் கூறிய இறுதி மூன்று வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நல்லாட்சி என்பதையும் மறந்து விட்டார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ரணிலை விலக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும். நாளையேனும் அதை செய்ய முடியும். இதற்கு நம்பிக்கையிலலா பிரேரணை அவசியம் இல்லை.

42 பேரை தன்வசம் வைத்திருக்கும் மைத்திரியால் இதை செய்ய முடியும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்படுவார் எனவும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.