நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு எதிரான வாதங்கள் அடிப்படையற்றவை: அனுரகுமார

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பதற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள் அடிப்படையான விடயங்கள் அடங்கிய வாதங்கள் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற 20வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்தரங்கில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரப்படுவதாக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் பதிலளித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க,

20வது அரசியலமைப்புச் சட்டம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு பின்னரே அமுலுக்கு வரும்.

இந்த திருத்தச் சட்டம் அமுலக்கு வந்தால், அதன் மூலம் ஓரளவு நன்மை தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் கிடைக்கும். ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் 7 மாதங்களாக குறையும் எனவும் கூறியுள்ளார்.