தேர்தல் முடிவுகளை அரசாங்கம் சரியாக புரிந்து கொள்ளவில்லை: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை அரசாங்கம் சரியாக புரிந்துகொண்டிருந்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகரகமை மாநகர சபையின் உறுப்பினர்களாக காந்தி கொடிக்கார, உட்பட 6 பேர் முன்னாள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரதமரை திருடர் என்கிறார். பிரதமர் ஜனாதிபதியை திருடர் என்கிறார். இறுதியில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் எனக் கூற நேரிட்டுள்ளது.

எம்முடன் இணைந்து கொள்பவர்களை நிராகரிக்க நாங்கள் தயாரில்லை.

நாட்டில் தற்போது காணப்படும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.