ரி.என்.எல். தொலைக்காட்சி ஒளிப்பரப்பு தடைக்கு காரணம் ஜனாதிபதியே: கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ரி.என்.எல். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புக்கு தடையேற்படுத்தும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு மன்னர் ஜனாதிபதியை விமர்சித்து ஒளிப்பரப்பான நிகழ்ச்சிக்கு பிறகே இந்த தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரருக்கு சொந்தமான தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புக்கு தடையேற்படுத்தியுள்ளதன் மூலம் இரண்டு விடயங்கள் தெளிவாகியுள்ளன.

ஒரு விடயம் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி. ஜனாதிபதியே இவை அனைத்துக்கும் பின்னால் இருந்து இயக்குகிறார் என்பது இரண்டாவது விடயம் எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.