ஜே.வி.பியின் 20 வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வாசுதேவ

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை சோசலிச மக்கள் முன்னணி எதிர்ப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புச்சட்டம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கொண்டு வரப்படும் யோசனை என்பதாலும் இலங்கையின் ஐக்கிய மற்றும் ஒருமைப்பாட்டுக்கு இந்த யோசனை மூலம் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் நாங்கள் அதனை எதிர்க்கின்றோம்.

எமக்கு நாட்டின் ஐக்கியமும் தேவை, அதேபோல் அதிகாரத்தை பரவலாக்கவும் வேண்டும். எமக்கு ஒற்றையாட்சி நாடும் வேண்டும். மாகாண சபைகளும் இருக்க வேண்டும். இவை இரண்டும் தேவை. 20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதில் வேறு பல காரணங்களும் உள்ளன.

மாகாணங்களுக்கு மத்திய ஆட்சி அதிகாரத்திற்கும் இடையில் பிணைப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகளுக்கும் மத்திய அதிகார மையத்திற்கும் இடையில் அதிகாரங்கள் தொடர்பில் இன்னும் உறுதியான இணக்கப்பாடுகள் இல்லை.

இவ்வாறான நிலையில், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அவசியம். அதனை நாடாளுமன்றத்தில் செய்ய முடியும். எனினும் அதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இதனை ரணிலின் தலைமைத்துவதில் செய்ய முடியாது. ரணில் மத்தியில் இருக்கும் அதிகாரத்தை தளர்த்த பார்க்கின்றார். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை. அதனையே நாங்கள் எதிர்க்கின்றோம் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.