கோத்தாவுக்கு அமெரிக்கா வைத்துள்ள ஆப்பு! அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை

Report Print Shalini in அரசியல்

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் காணப்படுகின்றது.

அந்த வகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸவை நிறுத்துவது தொடர்பில் பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளன.

எனினும் கோத்தபாய ராஜபக்ஸ இரட்டை குடியுரிமை கொண்டவர். அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸ களமிறங்குவது என்பது சற்று குழப்பமான விடயமாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.

மேலும், இவர் தேர்தலில் களமிறங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும் வரை கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதை தடுக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் என்று விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை.

ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அதுல் கெசாப் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.