ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு! இலங்கை அமைச்சர் பாராட்டு

Report Print Murali Murali in அரசியல்

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு, உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் வார்த்தை மோதல் உக்கிரமடைந்திருந்த நிலையில், அது மூன்றாம் உலக போர் அச்சத்தையும் உலக நாடுகளின் மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் தொடர்ச்சியாக வடகொரியா ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடையையும் விதித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.