மாங்குளத்தை புறக்கணிக்கிறாரா வடக்கு முதல்வர்?

Report Print Mohan Mohan in அரசியல்

முல்லைத்தீவு மாங்குளம் புறக்கணிக்கப்படுவதாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் வடக்கு முதல்வருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மாங்குளத்தில் காணி ஆணையாளர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் காலதாமதமாவது தொடர்பில் வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமேலேஸ்வரன் வடமாகாணசபை முதல்வரிடம் இது தொட்பாக வாய்மூலம் வினா எழுப்பினார்.

நேற்று வடக்கு மாகாணசபையின் 124 ஆவது அமர்வின்போதே அவர் வினா எழுப்பியுள்ளார்.

தங்கள் அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையின்போது எனது முன்மொழிவின் அடிப்படையிலும் முக்கியத்துவத்தின் காரணத்தாலும் தங்கள் பதிலுரையில் மாகாண காணிகள் ஆணையாளர் அழுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு பரிசீலிப்பதாக கூறியிருந்தீர்கள். இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வடக்கு முதல்வர் மாங்குளத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணமாக அங்கு அமைப்பது கைவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் முதல்வரின் பதிலை ஏற்கமறுத்த பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மாங்குளம் புறக்கணிக்கப்படுவதாக முதல்வருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.