சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய தயாராகும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான ஊடகங்களுக்கு இருக்கும் வரையறை காரணமாக வெளியிட முடியாத தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்கள் சமூக வலைத்தள ஊடகங்களில் வெளியாகி வருவதால், சமூக வலைத்தள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பிரச்சினையாக மாறியுள்ளன.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு வரையறை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது சம்பந்தமாக அரசாங்கம் சட்ட நிலைமை ஆராய்ந்து வருவதாகவும் டளஸ் அழகபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.