அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மனோ ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னாள் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய லெப்டினட் கேர்ணல் ரத்தனபிரிய பந்து என்ற இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

லெப்டினட் கேர்ணல் ரத்தனபிரிய பந்து, நாட்டு இராணுவத்திற்கு கௌரவத்தை பெற்றுக்கொடுத்த அதிகாரி. வடக்கு இணைந்து முன்னோக்கி செல்ல முடியுமே அன்றி பிரிந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்த மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சிந்திக்கும் மக்கள் கூட்டம் இருப்பது இந்த நாட்டுக்கு பெரிய பலம்.

இராணுவம் வடக்கு, கிழக்கில் பலவந்தமாக இருப்பதாகவும் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், முகாம்களை அகற்றுமாறு சில இனவாதிகள் கூறும் போது, இராணுவ அதிகாரி ஒருவர் இடமாற்றம் பெற்று செல்லும் வேளையில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உணவுர்பூர்வமாக அழுதமை சகவாழ்வு தொடர்பில் சிறந்த உதாரணமாகும்.

அத்துடன் அந்த அதிகாரி மிகவும் மனிதாபிமானத்துடன் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.