ஐநா சபை புலிகளுக்கு அடிமை என்கிறார் சரத் வீரசேகர! இன்று கொழும்பில் போராட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு வெளியிட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்பற்றி வரும் எதிர்மறையான கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் காரியாலத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சட்டத்தரணி ஜெப்ரீ நைஸினால் உருவாக்கப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராகவும் மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என அவர் குறப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை புலம்பெயர் புலிகளுக்கு அடிமையாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.