திசாநாயக்கவின் எச்சரிக்கை! கேள்விக் குறியாகும் தேசிய அரசாங்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

தேவை ஏற்பட்டால் புதிய கட்சி உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து கூடிய சீக்கிரம் வெளியேற்றிக் கொள்வதே எமது பிரதான இலக்கு என அவர் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கும் தயங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.