சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தா விவகாரம்! அமெரிக்காவின் பதில் என்ன?

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதற்கு அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் அனுமதிக்காது என்ற தகவல் குறித்து அமெரிக்க தூதரகம் கருத்து வெளியிட மறுத்துள்ளது.

இலங்கையில் இருந்து விடைப்பெற்றுச் செல்லும் தூதுவர் அடுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அண்மையில் சந்தித்திருந்தார்.

இதன்போது கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாவதற்கு அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் அனுமதிக்காது என்ற கருத்தை வெளிப்படுத்தினார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இந்த கருத்தை மறுத்திருந்திருந்தார்.

மேலும் இந்த விடயம் குறித்து பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்ததுடன், கம்மன்பில மற்றும் ஜீ.எல்.பீரிஸ் போன்றோர் தெளிவுபடுத்தியும் இருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்திடம் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இது குறித்து வினவியுள்ளது.

இதன்போது, “தனிப்பட்ட சந்திப்புக்களில் பேசப்படும் விடயங்கள் குறித்து கருத்து கூறுவது கடப்பாடு இல்லை” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.