இலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் இப்படியாக மாற்ற வேண்டும்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை நாடாளுமன்றத்தின் பெயரை வரையறுக்கப்பட்ட அலோசியஸ் அன்ட் சன் கம்பனி என மாற்ற வேண்டிவரும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியினர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இதன் போது அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் அலிபாபாவும் 118 திருடர்களும் என்றே முழு நாட்டிலும் ஊடகங்கள் வாயிலாக அழைக்கப்படுகிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றம் எனக் குறிப்பிடப்பட்டு நாடாளுமன்ற சந்தியில் தியவன்னா ஓயாவுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட அலோசியஸ் அன்ட் சன் கம்பனி என மாற்ற வேண்டிவரும் என்றார்.