தலைவர்கள் தூக்கத்தில்! நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை! மகிந்த கவலை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இன்று தலைவர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். இதனால் நாட்டில் யாருக்கே பாதுகாப்பு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாரதிபதி கொபவக தம்மானந்த தேரர் மற்றும் விதாபொல சோபித தேரர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இவ்வாறான விடயங்கள் குறித்து விஷேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே வேளை நியாயமான துரித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்படாவிட்டால் நாட்டில் எவருக்குமே வாழ முடியாத நிலை தோன்றிவிடும். யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இது நாட்டுக்கு நல்லதல்ல.

இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டில் நீதி எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாகின்றது. எவ்வாறிருப்பினும் நீதி அமைச்சு தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான விகாராதிபதி கோத்தபாய ராஜபகஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், அதன் காரணமாக அவரும் இச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது என்று கேள்வி உழுப்பட்டது.

அதற்குப் பதில் வழங்கிய அவர், அவ்வாறு எதுவும் இல்லை. அதில் எந்த உண்மையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.